உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிட் உடையணிந்து மாவட்டத்திற்குள் வருபவர்கள் கண்காணிப்பு | Coimbatore | Nipah virus

கோவிட் உடையணிந்து மாவட்டத்திற்குள் வருபவர்கள் கண்காணிப்பு | Coimbatore | Nipah virus

கேரளா மாநிலம் மலப்புரத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் இறந்தான். 60 பேருக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை கேரளா எல்லைப்பகுதியில் வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 இடங்களில் சுகாதரத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள், நர்சுகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து கோவை வரும் பொது மக்களை காய்ச்சல் உள்ளிட்ட சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். நிபா வைரஸ் தாக்கம் குறையும் வரை தமிழக மக்கள் கேரள மாநிலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

ஜூலை 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை