உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / டான் டீ தொழிலாளிங்க செம காண்டுல இருக்காங்க | No Road for 50 years

டான் டீ தொழிலாளிங்க செம காண்டுல இருக்காங்க | No Road for 50 years

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1969 ம் ஆண்டு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அரசு தேயிலை தோட்டக் கழகமான டேன் டீ உருவாக்கப்பட்டது. இதில் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி டேன் டீ சரகம் எண் 4 க்கு உட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அதனை ஒட்டி நாயக்கன்சோலை கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளுக்கு செல்ல தேயிலை தோட்டம் உருவாக்கப்பட்ட சமயத்தில் கற்கள் பதிக்கப்பட்ட சாலை அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் தேயிலை மூட்டைகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் தினமும் சென்று வரும் நிலையில் சாலை முழுமையாக பெயர்ந்து நடந்து செல்லவே முடியாத நிலைக்கு மாறி உள்ளது.

மார் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை