உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்| North kurumaiya athlete tournament| Tirupur

அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்| North kurumaiya athlete tournament| Tirupur

அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்/ North kurumaiya athlete tournament/ Tirupur திருப்பூர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் வடக்கு குருமைய தடகளப் போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 17 வயதிற்கு உட்பட்ட 100 மீட்டர் ஆண்கள் பிரிவில் மாஸ்கோ நகர் அரசு பள்ளி மாணவர் கிஷோர் முதலிடம் வென்றார். 19 வயதிற்குட்பட்ட 100 மீட்டர் பெண்கள் பிரிவில் ஜெய்வாபாய் பள்ளி மாணவி பவித்ரா முதலிடம் பெற்றார். 17 வயதிற்கு உட்பட்ட மூன்று கிலோமீட்டர் பிரிவில் ஜெய் சாரதா பள்ளி ரபிக் ரஹ்மான் முதலிடத்தை தட்டி சென்றார். தட்டு எறிதல் போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீ வர்ஷா அபார வெற்றி பெற்றார். நீளம் தாண்டுதலில் 14 வயது ஆண்கள் பிரிவில் விகாஸ் ஜூனியர் பள்ளி மாணவர் தர்ஷன் மற்றும் பெண்கள் பிரிவில் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகிஷா வெற்றி பெற்றனர். குண்டு எறிதல் போட்டியில் ஜெய் சாரதா பள்ளி மாணவர் ஸ்ரீராம் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை