உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவுநீரால் கெடும் நொய்யலின் புனிதம்! தடுக்க இதுவே சரியான நேரம் | Noyyal River

கழிவுநீரால் கெடும் நொய்யலின் புனிதம்! தடுக்க இதுவே சரியான நேரம் | Noyyal River

கோவையின் ஜீவ நதி என போற்றப்படும் நொய்யல் நதி, இன்று கழிவுநீர் கலக்கும் ஓடையாக மாறி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையில், கோவைக்கு மேற்கே 40 கி.மீ.,தொலைவில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் உள்ள சீதைவனத்தில் உருவாகும் சிற்றருவிதான், 20 கி.மீ.,பயணத்திற்கு பிறகு தொம்பிலிப்பாளையம் கூடுதுறையில் நொய்யல் ஆறாக உருவெடுக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 22 ஓடைகளும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சிறு ஓடைகளும் நொய்யலில் கலக்கின்றன. கொங்கு நாட்டின் அடையாளங்களில் ஒன்றான நொய்யல் ஆறு, கொங்கு செழிக்க காரணமாகவும் இருந்திருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசும் பொதுமக்களும் கவனம் செலுத்தாததால் நொய்யல் ஆறு பாழாகி வருகிறது. நொய்யல் ஆறு துவங்கும், மத்வராயபுரம் ஊராட்சியில் இருந்து ஆறு மற்றும் வாய்க்கால் செல்லும் வழியில், உள்ள ஊராட்சி பேரூராட்சி மாநகராட்சி பகுதிகளில் சிலர் எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் நேரடியாக கழிவுநீரை ஆற்றில் கலந்து வருகின்றனர். இதனால், நீர் மாசுபடுவதோடு விளைநிலங்களும் மாசுபட்டு வருகிறது. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

மே 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை