உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர்... தண்ணீர்... தவிக்கும் கிராம மக்கள்

தண்ணீர்... தண்ணீர்... தவிக்கும் கிராம மக்கள்

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட 4, 5 மற்றும் 6 வது வார்டுகளை சேர்ந்த ஒக்கிலிபாளையம் பகுதியில், சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மில்களில் வேலை செய்யும் அடித்தட்டு மக்கள். அந்த பகுதியில் குடிநீர் வசதி, சாக்கடை, மழைநீர் வடிகால் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லையென்று அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இப்போது 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். காசு கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தண்ணீர் வசதி இல்லாமல் பாத்ரூம் கட்டி யாருக்கும் பலன் இல்லாமல் உள்ளது. பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ