/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இங்கெல்லாம் வருவோம்னு நினைச்சு கூட பார்க்கலீங்க! அன்பால் இணைந்த ஆதரவற்றோர்
இங்கெல்லாம் வருவோம்னு நினைச்சு கூட பார்க்கலீங்க! அன்பால் இணைந்த ஆதரவற்றோர்
கோவையில் பல காப்பகங்கள் உள்ளன. அங்கு இருப்பவர்களில் பலர் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என் பல தரப்பட்டவர்கள் உள்ளனர். அவர்களுக்கு மற்றவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைப்பது இல்லை. காப்பகங்களில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் சோகம் தாங்கிய முகத்துடன் வாழ்நாட்களை கடத்தி வருகிறார்கள். இப்படி மனதளவில் பாதிக்கப்பட்ட அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக காப்பகங்களை நடத்துபவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு பொழுதுபோக்கு இடங்களுக்கு அழைத்து செல்கிறார்கள். அதன்படி கோவையில் தற்போது நடக்கும் அரசு பொருட்காட்சிக்கு அழைத்து சென்று மகிழ்ச்சி படுத்தியுள்ளனர். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஜூன் 26, 2024