ஆடிப்பாடி வரவேற்ற கல்லூரி மாணவர்கள் | Students welcomed King Mahabali | Onam Celebration
ஆடிப்பாடி வரவேற்ற கல்லூரி மாணவர்கள் | Students welcomed King Mahabali | Onam Celebration | AJK College of Arts and Science | Coimbatore கோவை பாலக்காடு சாலை நவக்கரையில் அமைந்துள்ள ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாக நடக்கிறது. ஆகஸ்ட் 16 ம் தேதி துவங்கிய ஓணம் விழா ஆகஸ்ட் 26 வரை நடக்கிறது. பண்டிகையையொட்டி தமிழகத்தைப் போதை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் say no to drugs; say yes to sadya என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவ-மாணவிகள் கேரள பாரம்பரிய உடைகளான முண்டு மற்றும் சேலை அணிந்திருந்தனர். கல்லூரி வளாகத்தில் பல வண்ண மலர்களால் மெகா சைஸ் அத்தப்பூ கோலமிட்டனர். திருவாதிரைக் களி, செண்டை மேளம், புளிக்களி உள்ளிட்ட பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மகாபலி மன்னனின் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான வருகை அனைவரையும் கவர்ந்தது. மாணவ, மாணவியர் உற்சாகமாக நடனமாடி வரவேற்று மகிழ்ந்தனர். அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாரம்பரிய அறுசுவை உணவு விருந்து வழங்கப்பட்டது.