கோவையில் ஆன்லைன் மோசடி உச்சம்: பறிபோனது ரூ.52 கோடி; மீட்டது 4.31 கோடி மீதி 47 கோடி என்னாச்சு
கோவை மாநகரில் கடந்த ஜன., மாதம் முதல் மே மாதம் வரையுள்ள 5 மாதங்களில் ஆன்லைனில் 2 ஆயிரத்து 446 பேர் பணத்தை இழந்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 53 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரத்து 674 ரூபாய் மோசடி ஆசாமிகளால் திருடப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 4 கோடியே 31 லட்சத்து 61 ஆயிரத்து 707 தான் மீட்டனர். இது தொடர்பாக 18 பேரை கைது செய்துள்ளனர். இதில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதி ரூ. 47 கோடியே 69 லட்சம் ரூபாய் இதுவரை மீட்கப்படவில்லை. அந்த பணம் வருமா என்று போலீசாருக்கே தெரியவில்லை. திடுக்கிட வைக்கும் இந்த ஆன்லைன் மோசடி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.