/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காட்டுப்பன்றிகளால் நெல் சாகுபடி பாதிப்பு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பு
காட்டுப்பன்றிகளால் நெல் சாகுபடி பாதிப்பு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பு
கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் நெல் பயிரிடப்படுகிறது. ஆனால் இதில் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழக அரசு நெல் கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 தான் கொடுக்கிறது. ஆனால் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவுக்கு இது கட்டுபடியாவதாக இல்லை. பக்கத்து மாநிலமான கேரளாவில் ஒரு குவிண்டாலுக்கு கொள்முதல் விலை ரூ. 3 ஆயிரத்து 500 கொடுக்கப்படுகிறது. இது தவிர அங்கு உற்பத்தி மானியமும் வழங்கப்படுகிறது. நெல் விவசாயிகளின் பல்வேறு குமுறல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 02, 2026