உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 3000 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| Palakkad marathon| sports| Fitness| Palakkad

3000 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| Palakkad marathon| sports| Fitness| Palakkad

3000 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| Palakkad marathon| sports| Fitness| Palakkad கேரள மாநிலம், பாலக்காடு போர்ட் ரன்னர்ஸ் கிளப் சார்பில் பாலக்காடு மராத்தான் போட்டி நடைபெற்றது. இதில், 21 கிலோமீட்டர் ஹாப் மராத்தான், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் ஃபேமிலி ஃபன் பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகள் மலம்புழா நீர்ப்பிடிப்பு பகுதியை சுற்றிலும் உள்ள பாதையில் நடத்தப்பட்டது. ஹாப் மராத்தான் போட்டியை கேரள தடகள சங்க துணைத்தலைவர் ஹரிதாஸ் துவக்கி வைத்தார். 10 கிலோ மீட்டர் பிரிவு போட்டியை மண்ணார்க்காடு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விபின் வேணுகோபால் துவக்கி வைத்தார். 5 கிலோ மீட்டர் போட்டியை ரப்பிலா நிர்வாக இயக்குநர் கிருஷ்ண குமார் துவக்கி வைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 3,000க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

ஜன 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை