BDOவிற்கு காசோலை அதிகாரம் | Panchayat malpractice
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மருதூர் ஊராட்சி தலைவராக பூர்ணிமா உள்ளார். ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது. மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியதில் கட்டிட வரைபட அனுமதி, 100 நாள் வேலையில் நிதி முறைகேடு உள்ளிட்ட பணிகளில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது அம்பலமானது. முறைகேடுகள் குறித்து ஊராட்சி தலைவரிடம் மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டது. அவரது விளக்கம் திருப்தியாக இல்லை. இதையடுத்து ஊராட்சி தலைவரின் காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது. அவருக்கு பதிலாக காரமடை BDOவிடம் ஒப்படைத்து கலெக்டர் உத்தரவிட்டார்.
பிப் 04, 2024