உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி செயலர் மீது 100 நாள் வேலை ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள்

ஊராட்சி செயலர் மீது 100 நாள் வேலை ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள்

ஊராட்சி செயலர் மீது 100 நாள் வேலை ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் / Panchayat Secretary Transfer / Villege Peoples Happy / Palladam திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் வேலை பார்த்து வரும் ஊராட்சி செயலர்களில் சிலர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். இதில் கணபதிபாளையம் ஊராட்சி செயலர் பிரபு சங்கரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க கலெக்டர் கிருஷ்துராஜ், பல்லடம் பி.டி.ஓ., கனகராஜிற்கு பரிந்துரை செய்தார். இதற்கு பி.டி.ஓ., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் வடுகபாளையம் புதூர், சித்தம்பலம், புளியம்பட்டி, அனுப்பட்டி, கரடிவாவி ஆகிய ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இத்துடன் கணபதிபாளையம் ஊராட்சி செயலர் பிரபு சங்கர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக வடுகபாளையம் புதூர் ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டார். பிரபு சங்கர் இடமாற்றம் செய்யப்பட்டதை வரவேற்று, கணபதிபாளையம் ஊராட்சி மக்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக பிரபு சங்கரை பணியிலிருந்து விடுவித்ததைக் கண்டித்து கணபதிபாளையம் ஊராட்சியில் வேலை பார்க்கும் இதர பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி