உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக அணியில் 5 கோவை வீரர்கள் | National Tournament| Para volleyball| sports| covai

தமிழக அணியில் 5 கோவை வீரர்கள் | National Tournament| Para volleyball| sports| covai

தமிழக அணியில் 5 கோவை வீரர்கள் | National Tournament| Para volleyball| sports| covai தேசிய அளவிலான பாரா வாலிபால் போட்டிகள் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் கல்லூரியில் வரும் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில் பல மாநிலங்கள் பங்கேற்கின்றன. தமிழகம் சார்பாக கோவை பாரா வாலிபால் அணியினர் தேசிய அணிக்கு தகுதி பெற்றுள்ளனர் கோவை அணியை சேர்ந்த ஐந்து வீரர்கள் தமிழகம் சார்பாக தேசிய அணியில் பங்கேற்பர். தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு பயிற்சியாளர் நாராயணன் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் கோவை பாரா வாலிபால் அணியினர் 40க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பாரா வாலிபால் உலகக் கோப்பை போட்டியில் கோவையைச் சேர்ந்து இரண்டு வீரர்கள் இந்திய அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது நடக்கவுள்ள தேசிய போட்டியில் கோவை அணியினர் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுவர் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்

பிப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை