/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மக்கள் வராததால் வியாபாரம் போச்சு... புலம்பும் வியாபாரிகள்... தாமஸ்வீதியில் பார்க்கிங் வேண்டும்
மக்கள் வராததால் வியாபாரம் போச்சு... புலம்பும் வியாபாரிகள்... தாமஸ்வீதியில் பார்க்கிங் வேண்டும்
கோவையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள பகுதிகளில் ஒன்று டவுன்ஹால். இங்குள்ள தாமஸ் வீதி, ரங்கே கவுடர் வீதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பார்க்கிங் பெரிய பிரச்னையாக உள்ளது. அந்த பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பார்க்கிங்கிற்கு இடம் இல்லாத காரணத்தாலும், போக்குவர்தது நெரிசலாலும் அங்கு வருவதில்லை. இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் புலம்புகிறார்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கடைக்காரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இப்படி பொது மக்கள், கடைக்காரர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 18, 2024