நாட்டின் பிரிவினை கஷ்டங்களை கண்முன் நிறுத்தும் கண்காட்சி
சுதந்திர தினத்தையொட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக அஞ்சல் அலுவலகத்தில் தேசிய கொடிகள் விற்கப்பட்டு வருகிறது. இ போஸ்ட் வாயிலாகவும் தேசிய கொடிகள் விற்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் விற்கப்பட்டுள்ளன. மேலும் நம் நாடு சுதந்திரம் அடையும் போது அதாவது இரண்டாக பிரிந்த போது மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை விளக்கும் கண்காட்சியும் அஞ்சல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த கண்காட்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 14, 2024