உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பத்து வருஷம் ஆச்சு! மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருமா?

பத்து வருஷம் ஆச்சு! மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருமா?

கோவை பீளமேடு, தண்ணீர் பந்தல் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு கடந்த 2006 ம் ஆண்டு ரூ. 12 கோடியே 65 லட்சம் திட்டத்தில் மேம்பாலம் கட்ட அரசு அனுமதி அளித்தது. இந்த மேம்பாலம் 549.14 மீட்டர் நீளமும் 8.5 மீட்டர் அகலம் கொண்ட தாக கட்ட திட்டமிடப்பட்டது. 2018ம் ஆண்டு ரயில் தண்டவாளத்தின் மேலே கட்டப்பட வேண்டிய மேம்பாலத்தை ரயில்வே நிர்வாகம் கட்டி முடித்தது. ஆனால் மேம்பலாத்தின் இரண்டு புறமும் பாலம் கட்டுவதற்கு மொத்தம் 18,682 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட இருந்தது. ஆனால் சில, நில உரிமையாளர்கள் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் . அதற்கு தடை விதிக்கப்பட்டதால் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி முடங்கியுள்ளது. ரயில்வே மேம்பாலம் கட்ட தாமதம் ஆவதால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேம்பாலம் கட்டுமான பணிகள் முடங்கியிருப்பதற்கான காரணங்கள், பாதிப்புகளை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை