உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் மறியல்

பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் மறியல்

டயாப்பர் ஆலை அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல் Desc : பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் மறியல் / People protest/ Farmers protest against Diaper company / Palladam பல்லடம் வாவிபாளையம் கிராமத்தில் பிளாஸ்டிக் மூலப்பொருளாக கொண்டு டயப்பர் ஆலை நிறுவ தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆலை அமைந்தால் சுற்றுச்சூழல் மாசடையும். மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் டயப்பர் கம்பெனிக்கு அனுமதி மறுத்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாய பூமியில் டயப்பர் ஆலை நிறுவினால் நிலத்தடி நீர் குறைந்து சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் உள்ளது. பொது மக்களின் கடும் எதிர்ப்பால் ஊராட்சி நிர்வாகம் கட்டிடத்திற்கு அனுமதி மறுத்தது. இந்நிலையில் ஊராட்சி தலைவரின் பதவி காலம் முடிவடைந்ததால், கடந்த பிப்ரவரி 20ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலை அமையும் கட்டிடத்திற்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து கட்டுமானப் பணிகள் துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடுமலை டூ பல்லடம் ஹைவேயில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாவிபாளையம், கழுவேரிப்பாளையம், சாலைப்புதூர், மந்திரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ