பாலத்தில் ஆக்கிரமிப்பு | புலம்பித் தள்ளும் மக்கள் | Coimbatore
கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக வரும் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது விபத்துக்குள்ளாகும் நிலைமை ஏற்படுகிறது. பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தின் கீழ் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 29, 2025