வாவ்! நகத்துக்கு கேப்... காலுக்கு ஷூ இது புதுசா இருக்கு...
செல்லப்பிராணிகளான நாய்களை தங்களின் குழந்தைகளை போல வளர்ப்பவர்களும் அதிகம் பேர் உள்ளனர். பெற்ற குழந்தைகளுக்கு நாம் எப்படி பார்த்து பார்த்து பொருட்கள் வாங்கி கொடுக்கிறோமோ அதைப்போல செல்லப்பிராணிகளுக்கும் பல்வேறு அலங்கார பொருட்களை போட்டு பார்த்து அழகு பார்க்கிறார்கள். இதற்கான கடை கோவையை அடுத்த சூலுாரில் அமைந்துள்ளது. இங்கு நாயின் கால் சுத்தப்படுத்துவற்கு பிரத்யேக பிரஷ், வாய் நாற்றமடிக்காமல் இருக்க ஸ்பிரேயர், நாய்களுக்கான ஷூக்கள், வாட்டர் பாட்டில், மசாஜர், டூத் பிரஷ், பூனைகளுக்கான நெயில் கேப், பீடிங் பாட்டில், பூனை எடுத்துச் செல்ல கேரி பேக், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கின்றன. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
 டிச 28, 2024