உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சவால்களை சமாளித்து துார் வாரப்படும் பில்லுார் அணை

சவால்களை சமாளித்து துார் வாரப்படும் பில்லுார் அணை

கோவை - நீலகிரி மாவட்ட எல்லையில், பில்லுார் வனப்பகுதியில், பவானி ஆற்றின் குறுக்கே உள்ளது பில்லுார் அணை. அணையின் நீர்மட்ட உயரம், 100 அடி. இந்த அணை கோவை மாவட்டம் காரமடையிலிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ளது. அணை கட்டி, 58 ஆண்டுகளாகிறது. இதுவரை துார் வாரப்படாததால் மழைக்காலங்களில் வெள்ள நீரில், மரங்கள், சேறும் சகதியும் அடித்து வரப்படுகின்றன. தற்போது அணையின் மொத்த கொள்அளவான 100 அடியில், 57 அடிக்கு சேறும், சகதியும் நிறைந்துள்ளது. மீதி 43 அடிக்கு தான் தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை தவிர்க்க இந்த அணை தற்போது ஜியோ டியுப் தொழில்நுட்பத்தில் துார் வாரப்படுகிறது. பல்வேறு சவால்கள் நிறைந்த பில்லுார் அணை துார் வாரும் பணி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ