பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் கலைநயமிக்க பொருட்கள்
பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் கலைநயமிக்க பொருட்கள்| Green Skill development programme | plant origin coconut shell and fibre handigrafts| govt of India | pandalur நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை, காபி உள்ளிட்ட விவசாயம் மற்றும் தையல் போன்ற சிறு தொழில்கள் மட்டுமே பெண்களுக்கான வேலைவாய்ப்பாக உள்ளது. பெண்களுக்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், பெரும்பாலான பெண்கள் கேரளா மாநிலத்தில் வீட்டு வேலைகளுக்காக செல்கின்றனர். ஆனால் சுய தொழில் செய்து முன்னேற்றம் காண முடியும் என்பதில் உப்பட்டி கிராம பெண்கள் சிலர் உறுதியாக உள்ளனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் ஆதரவுடன் 2 மாத பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருகின்றனர். மரம் சாரா பொருட்களில் இருந்து கலைப் பொருட்களை தயாரிக்கும் வகையில் துாக்கி எறியப்படும் கொட்டாங்குச்சிகளில் கலை நயமிக்க, அழகிய பொருட்களை வடிவமைப்பதில் பயிற்சி பெறும் பெண்கள், தங்கள் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.