உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் போலீஸ் அக்கா திட்டம் ரெடி | Police akka scheme against female cyber issues

கோவையில் போலீஸ் அக்கா திட்டம் ரெடி | Police akka scheme against female cyber issues

கல்லூரி மாணவிகளுக்காக போலீஸ் அக்கா திட்டத்தை கோவை போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். இதன் மூலம் சைபர் குற்றங்கள், சமூக வலைதள மிரட்டல்கள், மார்பிங் மிரட்டல்கள், பாலியல் தொந்தரவுகள் முதலிய பெண்களுக்கான பிரத்யேக பிரச்சினைகளுக்கு நேரில் சென்று தீர்வு கொடுக்கப்படுகிறது. போலீஸ் அக்கா திட்டத்தில் பெண்களுக்கு உதவுவதற்காக முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்ட 37 பெண் போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் தொடர்பு எண்கள், அனைத்து கல்லூரி பெண்கள் விடுதிகளிலும், கல்லூரி வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இடம்பெற்றிருக்கும். வீட்டிலும், கல்லூரிகளிலும் சொல்ல முடியாத பிரச்சினைகளை நட்புணர்வுடன் நம்பிக்கையுடன் போலீஸ் அக்காவிடம் பகிர்ந்து பயனடையலாம் என போலீஸ் கமிஷனர் கூறினார்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை