போக்குவரத்து விதிமீறலா... கூலாக கண்காணிக்கும் போலீசார் | Coimbator
கோவை மாநகரில் போக்குவரத்து காவலர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த பழைய போலீஸ் பூத்துகள் அகற்றப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய ஏ.சி. பூத்துகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக சுங்கம் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பாதசாரிகள் பத்திரமாக சாலைகளை கடந்து செல்ல ஏதுவாகவும் புதிய போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏர் கூலர் மற்றும் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. இதில் உட்கார்ந்தவாறு போக்குவரத்து போலீசார் சாலை விதிமீறலை கண்காணிப்பார்கள்.மேலும் அங்கு வாகனங்களின் பதிவு எண்ணை பதிவு செய்யும் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம், ஹல்மெட் அணியாமல் வருவது போன்ற போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் கண்டறிந்து வாகன எண்ணுடன் திரையில் காண்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.