அப்பளமாய் நொறுங்கிய கார்... ஒரு குடும்பமே பலியான சோகம் | Pollachi | Car Accident | Coimbatore
அப்பளமாய் நொறுங்கிய கார்... ஒரு குடும்பமே பலியான சோகம் | Pollachi | Car Accident | Coimbatore கோவை மாவட்டம் பொள்ளாச்சி டு உடுமலை ரோட்டில் நல்லாம்பள்ளி பிரிவு பகுதியில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. ப்ரத் சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் செடி மற்றும் மரங்களுக்கு டேங்கர் லாரி மூலம் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தனர். அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. டிரைவர் உட்பட காரில் இருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி ஸ்பாட்டிலேயே இறந்தனர். அக்கம் பக்கத்தினரும் மற்ற வாகன ஓட்டிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 ஆண்கள், 3 பெண்களின் சடலங்களை மீட்டனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் 5 பேர் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்தவர்கள் மதுக்கரை குருபம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் வயது 45, அவரது மனைவி பூரணி வயது 39, மகள்கள் நர்மதா வயது 20, ஆர்த்தி வயது 19, காரை ஓட்டிய ராமன் வயது 35 என்பது தெரியவந்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். கோர விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.