உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நிலத்தை மாசுபடுத்தினால் கடும் நடவடிக்கை; பல்லடம் தாசில்தார் ஜீவா எச்சரிக்கை

நிலத்தை மாசுபடுத்தினால் கடும் நடவடிக்கை; பல்லடம் தாசில்தார் ஜீவா எச்சரிக்கை

நிலத்தை மாசுபடுத்தினால் கடும் நடவடிக்கை; பல்லடம் தாசில்தார் ஜீவா எச்சரிக்கை | Pollution from industrial wastes | palladam திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் கிராமத்தில் பயன்பாடற்ற தனியாருக்கு சொந்தமான கல்குவாரி பாறைக்குழி உள்ளது. இதில் கோவை மாவட்ட பகுதியில் இயங்கி வரும் இரும்பு தொழிற்சாலைகளில் இருந்து காஸ்டிங் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் பாறைக்குழி உரிமையாளரிடம் புகார் அளித்தனர். கழிவுகள் கொட்ட வந்த இரண்டு லாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இனிமேல் கழிவுகள் ஏற்றி வரக்கூடாது என லாரி டிரைவர்களை எச்சரித்து அனுப்பினர். விவசாயிகள் கூறுகையில், கோடங்கிபாளையம் பகுதியில் விவசாய தொழில் பரவலாக நடந்து வருகிறது. இங்குள்ள பயன்பாடற்ற பாறைக்குழியில் டன் கணக்கில் காஸ்டிங் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகுவதுடன் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்து. பாறைக்குழியில் கொட்டப்பட்டுள்ள காஸ்டிங் கழிவுகளை நில உரிமையாளர் உடனடியாக அகற்ற வேண்டும். தவறினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி நாங்களே பொக்லைன், லாரிகள் உதவியுடன் காஸ்டிங் கழிவுகளை அள்ளி சென்று நில உரிமையாளருக்கு சொந்தமான மில்லில் கொட்டுவோம். இனி வரும் நாட்களில் இதுபோல் கழிவுகளை கொட்டாமல் இருக்க உரிமையாளர் உறுதி அளிக்க வேண்டும். பாறைக்குழியை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தாசில்தார் ஜீவாவிடம் விவசாயிகள் புகார் கூறினர். விதிமுறை மீறி காஸ்டிங் கழிவுகள் கொட்ட லாரிகள் வந்தால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ