உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பெற்றோர்களுக்கு பொங்கல் கொடுத்து மகிழ்ந்த பழங்குடி மாணவ குழந்தைகள் | Pongal Celebration | Pandalur

பெற்றோர்களுக்கு பொங்கல் கொடுத்து மகிழ்ந்த பழங்குடி மாணவ குழந்தைகள் | Pongal Celebration | Pandalur

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பனியர், காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மண்ணின் மைந்தர்களான இவர்கள் மலையாள மொழி பேசும் இந்து மக்கள் கொண்டாடும் ஓணம், விஷூ மற்றும் கதிர்அறுப்பு ஆகிய பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதில் சற்று வித்தியாசமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பென்னை பழங்குடியின கிராமத்தில் அங்குள்ள அரசு பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையில் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவாக பழங்குடியின மக்கள் கிழங்கு, கீரைகள் மற்றும் அதனை சார்ந்த உணவுப் பொருட்களையே அதிகம் சமைப்பதிலும், உட்கொள்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பொங்கல் வைத்து அதன் ருசியை உணரச் செய்து, தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை தங்கள் பெற்றோர்களுக்கு, பழங்குடியின சமுதாய மாணவர்கள் கொண்டாடச் செய்வது சற்று வித்தியாசமான நிகழ்ச்சியாக உள்ளது. வனத்திற்கு மத்தியில் வாழும் மண்ணின் மைந்தர்களுடன், தமிழக மண்ணின் பாரம்பரிய விழாவை கொண்டாடி மகிழ்ந்த பள்ளி நிர்வாகத்திற்கு கிராமத்து மக்கள் நன்றியை பகிர்ந்து மகிழ்ந்தனர். தலைமையாசிரியர் முருகேசன் தலைமையில், ஆசிரியர் ரோஸ்மேரி, ஊர் தலைவர் அப்பு, வாசு, பள்ளி மேலாண்மை குழு தலைவி பீனா மற்றும் பழங்குடியின மக்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பூஜைகளை கோவில் பூஜாரி கிருஷ்ணா செய்தார்.

ஜன 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை