உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் சேவையில் தபால் துறை | Postel department achive

மக்கள் சேவையில் தபால் துறை | Postel department achive

வால்பாறை அருகே சின்னக் கல்லார் கிராமம் உள்ளது. இது தமிழகத்தின் சிரபுஞ்சி என அழைக்கப்படுகிறது. இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். மலைவாழ் சிறிய கிராம மக்கள் நலன் கருதி இங்கு இந்திய அஞ்சல் துறை சார்பில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிளை அஞ்சலகம் செயல்படுகிறது. ஆண்டில் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் மழை காலத்தில் இங்குள்ள இணைய தள சேவை முற்றிலும் துண்டிக்கப்படும். இங்கு போஸ்ட் மேனாக கிருத்திகா வேலை பார்க்கிறார். இவர் இங்கு வரும் தபால்களை கடும் சிரமத்திற்கு இடையே நடந்தே சென்று கிராம மக்களிடம் வழங்கி வருகிறார். மேலுமண் அவர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கே சென்று சேவை செய்கிறார். கொட்டும் மழையில் ரெயின் கோட், குடை சகிதமாக சென்று தபால்களையும், முதியோர் உதவி தொகையும் வழங்கி தடையின்றி தொடர்ந்து வழங்கி வருகிறார். மலைப்பகுதியில் இயற்கையோடு இணைந்து தடையில்லா சேவைகளை வழங்கி வருகிறார். இவரது பணியை தபால்துறை குறும்படமாக எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டுள்ளது. இதுகுறித்து வால்பாறை போஸ்ட் மாஸ்டர் கீதா கூறுகையில், வால்பாறை மலைபிரதேசத்தில் வனவிலங்கு நடமாட்டம் அதிகம். எனினும் கொட்டும் மழையிலும் தபால் சேவை சிறப்பாக நடைக்கிறது. குறிப்பாக சின்னக் கல்லார் எஸ்டேட் பகுதியில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அடைமழையிலும் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர் என்றார்.

ஜூலை 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ