/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டுக்கு பார்சல்... அஞ்சல் துறையின் புது திட்டம்...
குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டுக்கு பார்சல்... அஞ்சல் துறையின் புது திட்டம்...
இந்திய தபால் துறை சார்பில் பார்சல் பேக்கேஜிங் வசதி வழங்கப்படுகிறது. பொது மக்கள் பொருட்களை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. அதை தபால் அலுவலக ஊழியர்களே பாதுகாப்பாக பார்சல் செய்து தருவார்கள். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் பார்சல் பேக்கேஜிங் அனுப்பலாம். தபால் துறை அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் பார்சல் பேக்கிங் செய்யப்படுவதால் வெளிநாடுகளுக்கு ஆட்சேபகரமான பொருட்கள் அனுப்புவது தவிர்க்கப்படுகிறது. இந்தியா போஸ்ட் சார்பில் பார்சல் பேக்கேஜிங் அனுப்புவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 25, 2025