கேட்பாரற்று கிடக்கும் குட்டை... கொள்ளை போகும் மண்...
கோவை மாவட்டம், வடக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கரியாகவுண்டனூர். இந்தப் பகுதியில் சுமார் 3 1/2 ஏக்கர் பரப்பளவில் புளியங்குட்டை உள்ளது. இந்தக் குட்டையை சுற்றி முள்புதர்களும், கட்டடக் கழிவுகளும், நிறைந்த பகுதியாக மாறி உள்ளது. அது மட்டுமில்லாமல் குப்பைகளை கொட்டும் இடமாகவும் உள்ளது. இரவு நேரங்களில் இந்த குட்டையில் மண் திருட்டு நடைபெறுகிறது. இந்த புளியங்குட்டையை முறையாக தூர்வாரி கரைகளை வலுப்படுத்த வேண்டும். மண் திருட்டில் ஈடுபடும் கும்பலை தடுத்து கடுமையான நடவடிக்கை வேண்டும். குட்டை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 28, 2025