உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டரி மாவட்டம் 3201 மற்றும் 18 ரோட்டரி சங்கங்கள் ஏற்பாடு | Pulseheartathan | Rotary | Kovai

ரோட்டரி மாவட்டம் 3201 மற்றும் 18 ரோட்டரி சங்கங்கள் ஏற்பாடு | Pulseheartathan | Rotary | Kovai

ரோட்டரி மாவட்டம் 3201 மற்றும் 18 ரோட்டரி சங்கங்கள் இணைந்து 30 முதல் 40 இளம் வயது மாரடைப்பு பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பல்ஸ் ஹார்ட்டத்தான் கோவையில் நடைபெற்றது. இதுகுறித்து ரோட்டரி கிளப் இளைஞர்கள் பிரிவு மாவட்டத் தலைவர் ரோட்டேரியன் காட்வின் மரியா விசுவாசம் கூறுகையில், இளம் வயதில் மாரடைப்பு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரோட்டரி மாவட்டம் 3201 மற்றும் 18 - ரோட்டரி சங்கங்கள், எஸ். பி. டி மருத்துவமனை மற்றும் கோவை மாவட்ட அத்லட்டிக் அசோசியேசன் ஆகியவை இணைந்து பல்ஸ்  ஹார்ட்டத்தான் ஓட்டத்தை கோவையில் நடத்தியது. கோவை ராம்நகர் எஸ்.பி.டி. மருத்துவமனையில் இருந்து வ.உ.சி மைதானம் வரை 5 கிலோ மீட்டர் துாரம் நடைபெற்ற இந்த ஓட்டம் ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதலில் நடந்து செல்வது, மெதுவாக ஓடுவது, ஓட்டமாக ஓடுவது, பின்னர் மெதுவாக ஓடுவது, நடப்பது என 5 விதமாக நடத்தப்பட்டது. பல்ஸ்  ஹார்ட்டத்தான் ஓட்டத்தை ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு துவக்கி வைத்தார். போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு ஓட்டத்தையொட்டி ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 3 - 5, 6 - 8 என்று இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெற்றன. சிறந்த ஓவியங்களை வரைந்த மூன்று பேருக்கு பரிசுகளை சிறப்பு விருத்தினார்கள் வழங்கி பாராட்டினர் என்றார். எஸ்.பி.டி. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுப்பு ராஜா, மருத்துவமனை சேர்மன் சுசீலா, ரோட்டரி சங்க இணைச் செயலாளர் சுப்பு, ஒருங்கிணைப்பாளர் பத்மகுமார், மாவட்ட அத்லட்டிக் அசோசியேசன் தலைவர் ஸ்ரீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை