உஷார் மக்களே... QR Scan மூலம் புதிய மோசடி...
தற்போது இளநீர் கடை முதல் பெரிய மால் வரை எல்லா இடத்திலும் கியு.ஆர். கோடு பயன்படுத்தித் தான் பெரும்பாலானவர்கள் பணம் செலுத்துகிறார்கள். அந்த அளவுக்கு கியு. ஆர். கோடு பயன்படுத்துவது சகஜமாகி விட்டது. ஆனால் அந்த கியு.ஆர்., கோடு பயன்படுத்துவதிலும் மோசடி நடப்பதாக கூறப்படுகிறது. கியு.ஆர்.,கோடு என்பது பணம் செலுத்த மட்டும் தான். பணத்தை பெறுவதற்காக அல்ல என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சில இடங்களில் கியு.ஆர்., கோடு ஸ்கேன் செய்தால் அதிலிருந்து உங்களுக்கு பணம் கிடைக்கும். பாயிண்ட்ஸ் கிடைக்கும் என்று கூறுவார்கள். அதை நம்பக்கூடாது. மோசடி ஆசாமிகள் உங்களுக்கு வலை விரிக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே கியு.ஆர்., கோடு பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.