உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நகரின் இதயப் பகுதி துர்நாற்றத்தின் இருப்பிடம் | Coimbatore Railway Station

நகரின் இதயப் பகுதி துர்நாற்றத்தின் இருப்பிடம் | Coimbatore Railway Station

கோவை மாநகரின் இதயம் போன்ற பகுதியான ரயில் நிலையம் அருகில் செல்வோர் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அளவிற்கு அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. வாகனங்கள் அதிக அளவில் சென்றாலும், ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை பற்றி கவலைப்படாமல் பட்டப்பகலிலேயே சிறுநீர் கழிக்கும் நபர்களால் அந்த பகுதி நாற்றம் அடிக்கும் இடமாக மாறி உள்ளது. இதுபோன்று அசுத்தம் செய்யாமல் இருப்பதற்காக அந்த இடத்தில் கண்காணிப்பிற்கு தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் அசுத்தம் செய்யும் நபர்கள் யாரும் பார்க்காத நேரத்தில் சிறுநீர் கழித்து விட்டு சென்று விடுகிறார்கள். மேலும் அந்த இடத்தில் சாக்கடை நீர் தேங்குவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கிடையில் அந்த இடத்தில் ரயில் பெட்டி ரெஸ்டாரண்ட் அமைய உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்று மக்கள் பயன்பாட்டுள்ள இடமாக மாற்றினால் தான் ரயில் நிலையம் அருகில் யாரும் அசுத்தம் செய்ய மாட்டார்கள் என்பது உறுதி.

பிப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ