கோவை வழித்தடத்தில் கைவிடப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா?
தென்னக ரெயில்வேயில் அதிக வருமானம் ஈட்டித் தரும் மூன்றாவது ரயில் நிலையம் கோவை ரயில் நிலையம். அதே போல சரக்கு போக்குவரத்து வாயிலாக அதிக வருமானம் சம்பாதித்து தரும் ரயில் நிலையம் இருகூர். ஆனால் இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தவிர கோவை-பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ரயில்வே நிர்வாகத்துக்கு வைத்தும் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்ட மக்களின் ரயில்வே கோரிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 02, 2024