₹ பல நுாறு கோடி மக்கள் வரிப்பணம் வீணானது | Rain water accumulated on the bridge | Covai
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் 222 கோடி ரூபாய் மதிப்பில் 2019 ல் கட்டப்பட்டது. இரண்டரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தின் மையப்பகுதியில் இரண்டு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில் ஓட்டை விழுந்தது. அதேபோல் கோவை பெரியநாக்கன்பாளையம் மேம்பாலம் 115 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. புதன் இரவு பெய்த கன மழையால் பாலத்தில் பல இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால் ஓட்டை விழுந்தும், பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. தரமற்ற மேம்பாலங்களை கட்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்களிடம் இழப்பீடு வசூலித்து பாலங்களில் பழுது நீக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.