உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு... குடிநீர் குழாய் பதிப்பு

கோவை ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு... குடிநீர் குழாய் பதிப்பு

கோவை வடக்குப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் வெள்ளமென பெருகி, சோமயம்பாளையம், கணுவாய் தடுப்பணைகளை நிரப்பி, அங்கிருந்து சின்னவேடம்பட்டி ராஜவாய்க்கால் வழியாக வெள்ளக்கிணறு குட்டைகளை நிறைத்து, பின்னர் சின்னவேடம்பட்டி ஏரியை அடையும். இதனால் தடாகம், கணுவாய், பன்னிமடை, துடியலூர், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வட்டாரங்களில் நிலத்தடி நீர் அதிகரிக்கும். ஆனால் துடியலூர் வளர்மதி நகர் அருகே செல்லும் ராஜவாய்க்கால் குறுக்கே, பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்ட ராட்சத குழாயை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் ராஜவாய்க்கால் வழியாக வரும் வெள்ள நீர் தடுக்கப்பட்டு ஊருக்குள் புகுந்து, பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்படுத்துவதோடு விவசாயமும் பாதிக்கப்படுகிறது. ராஜவாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை உயர்த்தி அமைக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ