தென் மாவட்டங்களுக்கு ஜல்லிக்கட்டு | கொங்கு மண்டலத்திற்கு ரேக்ளா போட்டி….
கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் இரண்டு நாள் வேளாண் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் கொங்கு மாவட்டம் மற்றும் கரூர், மைசூர், கேரளா போன்ற பல பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இப் போட்டியில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற பரிசுப் பொருட்கள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.இப்போட்டியில் ஈடுபடும் காளைகளின் உயரம், திறன், பலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பெரிய மாடு, நடுத்தரமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என்று நான்கு பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது. பந்தய தூரம் மாடுகளின் வகைகளை வைத்து முடிவு செய்யப்படுகின்றது.இப்போட்டியானது 200 மீட்டர் 300 மீட்டர் என்று மீட்டர் கணக்கில் நடத்தப்படுகின்றது. காங்கேயம் இன மாடுகளை காப்பாற்றும் வகையில் இப்போட்டி நடக்கப்படுகிறது என்று கூறினார்கள்.