உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கார் வாயிலாக தியாகிகளை கவுரவப்படுத்தும் இஸ்லாமியர்

கார் வாயிலாக தியாகிகளை கவுரவப்படுத்தும் இஸ்லாமியர்

கோவை நேரு விளையாட்டு அரங்கம் பகுதியில் தனியார் கார் மறு வடிவமைப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இம்ரான், நிர்வாக இயக்குநர் நயீம் அகமத். இவர்களின் குழுவினர் நாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களையும் தியாகிகளையும் பெண் விடுதலை வீரர்களையும் நினைவு கூறும் விதமாக அவர்களுடைய ஒரு காரை சுமார் ரூ. 7-8 லட்சம் செலவு செய்து மாற்றி வடிவமைத்துள்ளனர். அந்த காரில் உள்ள இருக்கைகளின் நுனிகள், கதவுகளில் தேசிய கொடியின் மூன்று வண்ணங்களையும் மேலும் காருக்குள் முன்புறம் இரண்டு ஸ்பீக்கர்களை பொருத்தி அதன் மேலும் தேசிய கொடியின் வண்ணங்களை தீட்டியுள்ளனர். இப்படி ஒரு காருக்குள் இவ்வளவு செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜன 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ