/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அரிசி, பருப்பில் வண்டு இருந்தால் புற்றுநோய் வருமா? - விளக்குகிறார் மருத்துவர்
அரிசி, பருப்பில் வண்டு இருந்தால் புற்றுநோய் வருமா? - விளக்குகிறார் மருத்துவர்
நமது உணவில் பெரும்பகுதி அரிசி, கோதுமை, தானியங்கள் தான். இவற்றை நாம் சரியான முறையில் பராமரித்து வைக்கவில்லையென்றால் வண்டு, பூச்சிகள் தானியங்களில் வந்து விடும். பூச்சிகள் அதிக அளவில் உள்ள தானியங்களை நாம் சாப்பிடும்போது வயிற்றுக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அலர்ஜி, அரிப்புகள் ஏன் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க ஒரே வழி அரிசி, கோதுமை, தானியங்களை காற்று புகாத டிரான்ஸ்பரன்ட் கன்டெய்னர்களில் சேமித்து வைப்பது தான். இது தவிர உடனடி உணவுகளை நாம் உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் நம்மை தாக்க வாய்ப்புள்ளது. ஜீரண கோளாறு, உடல் பருமன் போன்றவையும் ஏற்படும். இதற்கான காரணங்கள் என்ன? இவற்றை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 01, 2024