தினமலர் செய்தி எதிரொலி! பயம் காட்டிய ரோடு பளபளப்பா மின்னுது...
கோவை காளீஸ்வரா மில் செல்லும் கீழ் பாலத்தில் சாலை இணைக்கும் இடத்தில் இரும்பு தகடுகள் வெளியே நீட்டியிருந்தன. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய வீடியோ காட்சி தினமலரில் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இரும்பு தகடுகளை சரி செய்தனர். தற்போது அந்த சாலையில் வாகனங்கள் எந்த சிரமமும் இன்றி சென்று வருகின்றன. மாநகராட்சி எடுத்த நடவடிக்கை பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜூன் 15, 2025