உருவாகிறது சிக்னல் இல்லாத கோவை மாநகரம்
கோவை அவினாசி சாலை, திருச்சி சாலைகளில் இருந்த சிக்னல்களை அகற்றி விட்டு ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் உக்கடம், குனியமுத்துார் உள்ளிட்ட பல இடங்களில் சிக்னல்கள் அகற்றப்பட்டு ரவுண்டானாக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ரவுண்டானாக்கள் அமைப்பதை கோவை மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். மேலும் கோவை நகரை சிக்னல் இல்லாத நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 16, 2025