உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காணொலியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி | Rozgar mela PM Modi | kovai

காணொலியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி | Rozgar mela PM Modi | kovai

கோவை குனியமுத்தூர் பகுதி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் ரோஜ்கார் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய, மாநில அரசு துறைகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி காணொலி வழியாக நிகழ்ச்சியில் இணைந்தார். மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பாஜ தேசிய மகளிர் அணி தலைவரான கோவை எம்.ல்.ஏ வானதி முன்னிலை வகித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அஞ்சல் துறை, ரயில்வே மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை ஆகியவற்றில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 191 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 25 பேர் நேரடியாக மத்திய இணை அமைச்சரிடம் இருந்து பணி நியமன ஆணைகளை பெற்றனர்.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ