உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகா பற்றி சத்குரு கருத்து

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகா பற்றி சத்குரு கருத்து

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகா பற்றி சத்குரு கருத்து | sadhgurus opinion on yoga to be added in asian games | kovai ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44வது பொதுக்கூட்டம் டில்லியில் நடைப்பெற்றது. இதில் 2026ல் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகா இடம் பெறும் என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் சத்குரு கருத்து பதவிட்டுள்ளார். அதில் அடிப்படையில் போட்டி விளையாட்டுகளின் அரங்காக இருக்கும் ஒரு இடத்திற்குள் யோகா நுழைவது மிகுந்த வேதனை மற்றும் ஏமாற்றத்தை அளிக்கிறது. யோகா ஒரு போட்டியாக இருக்க முடியாது. யோகா என்பது மனிதர்களை வரையறுக்கப்பட்ட சாத்தியங்களிலிருந்து எல்லையற்ற உணர்திறன் மற்றும் வாழ்க்கை அனுபவத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி மற்றும் சுய-பரிணாம வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் ஆகும். இதை வேறு யாருடனும் போட்டியாக செய்யக்கூடாது. இதன் மூலம், சக்திவாய்ந்த யோக அறிவியலை, மற்றொருவரை விட சிறப்பாகச் செய்ய முயற்சிக்கும் சர்க்கஸ் போன்ற செயல்முறையாக நாம் குறைத்து விடுவோம். யோகாவின் அடிப்படை விழிப்புணர்வைப் பற்றியது, ஒப்பீடு செய்வதையும் போட்டி போடுவதையும் பற்றியது அல்ல. யோக அறிவியலின் பிறப்பிடமாக விளங்கும் நாகரிகமாக, அது ஒரு அபத்தமான விளையாட்டாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விவேகம் இருக்கும் என்று நம்புகிறேன் என பதவிட்டுள்ளார்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை