உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மேம்பாலம் மட்டுமல்ல... சர்வீஸ் சாலையும் வேண்டும்...

மேம்பாலம் மட்டுமல்ல... சர்வீஸ் சாலையும் வேண்டும்...

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலைகளில் ஒன்று மேட்டுப்பாளையம் சாலை. அந்த சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து அந்த சாலையில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி சாய்பாபா காலனி அழகேசன் ரோடு சந்திப்பிலிருந்து தொடங்கும் மேம்பாலம் எரு கம்பெனியில் முடிவடையும் வகையில் சுமார் ஒரு கிலோமீட்டர் துாரத்துக்கு கட்டப்படுகிறது. ரூ.75 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டாலும் அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் கட்டப்படும்மேம்பாலம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை