உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சமுதாய கூடமா? அல்லது சமூக விரோதிகளின் கூடமா?

சமுதாய கூடமா? அல்லது சமூக விரோதிகளின் கூடமா?

கோவை மாநகராட்சி 26 வது வார்டுக்கு உட்பட்ட கருப்பண்ண கவுண்டர் லே அவுட் பகுதியில் சமுதாயக்கூடம் உள்ளது. இது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து 20 லட்சமும், பொது நிதியிலிருந்து 30 லட்சம் என மொத்தம் 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. மக்களின் பயன்பாட்டுக்கு என கட்டிய சமுதாயக்கூடம், தற்போது காட்சி பொருளாக்கி, மக்களின் வரி பணம் 50 லட்சம் ரூபாய் விரயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த இடம் புதர்மண்டி இருக்கிறது. கட்டடம், மின் சாதன பொருட்கள், கழிவறை, தண்ணீர் பைப், என அனைத்தும் சிதிலமடைந்துள்ளது. சமுதாய கூடத்தின் சீரழிவுக்கு காரணம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி