உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை பெண்களை அலறவிடும் உள்ளாடை திருடன்... ஷாக் வீடியோ Coimbatore | Crime News | CCTV | Kovai case

கோவை பெண்களை அலறவிடும் உள்ளாடை திருடன்... ஷாக் வீடியோ Coimbatore | Crime News | CCTV | Kovai case

கோவை பெண்களை அலறவிடும் உள்ளாடை திருடன்... ஷாக் வீடியோ Coimbatore | Crime News | CCTV | Kovai case வாய்ஸ் லீடு: கோவையை உலுக்கும் உள்ளாடை திருடன்... பெண்கள் துணிகளை குறிவைத்து திருடும் சைக்கோ நபர்... வெளியான வீடியோவால் பரபரப்பு... ப்ரத் (ஆரோ மார்க் வைத்து துணி விசுவல், பிஜிஎம்) கோவை சரவணம்பட்டி ஜிகேஎஸ் நகரில் தான் இப்படியொரு வினோதமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே வீட்டு முற்றத்தில் காய வைக்கும் பெண்களின் துணிகள், உள்ளாடைகள் தொடர்ச்சியாக மாயமாகி வந்தன. அப்பார்ட்மென்ட்களிலும் பெண்கள் காயப்போடும் துணிகள் மிஸ் ஆகின. முதலில் தங்களுக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதோ என்று நினைத்த பெண்கள், பக்கத்து வீடுகளில் வசிக்கும் தங்களின் தோழிகள், உறவினர்களுக்கும் இப்படி நடப்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். பெண்களின் துணிகள் மட்டுமே காணாமல் போய் இருக்கின்றன. ஆண்கள் துணி ஒன்றை கூட தொடவே இல்லை. நிச்சயம் இதை செய்பவன் திருடனமாக இருக்க முடியாது. சைக்கோ மனநிலை கொண்டவனாகவோ அல்லது மனவளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களாகவோ தான் இருக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கருதினர். பெண்களுக்கு தேவை இல்லாத மனஉளைச்சல் ஏற்பட்டதால், இது தொடர்பாக அந்த பகுதியினர் போலீசிலும் புகார் செய்தனர். அதன் பிறகும் துணிகள் திருட்டு நடந்ததால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தான் ஒரு குடியிருப்பின் மொட்டை மாடியில், இதுவரை காணாமல் போன பெண்களின் மொத்த உடைகளும் குவியல் குவியலாக இருந்தன. ​ப்ரத் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் துணிகளை கைப்பற்றி விசாரணையை துவங்கினர். பின்னணியில் சைக்கோ திருடன் இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று போலீசாரும் கருதுகின்றனர். அந்த ஏரியாவில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கூடிய விரைவில் திருடன் சிக்குவான் என்று போலீசார் கூறினர். ​கோவை குரூப்

ஆக 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி