அப்துல்கலாம் அன்னை தெரசா அறக்கட்டளை ஏற்பாடு | School Function
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் நடைபெற்றன. பெண்ணுரிமை, தேசபக்தி, அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ஷீஜா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியை அறக்கட்டளை முதன்மை ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ் ஒருங்கிணைத்தார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சேரங்கோடு ஊராட்சி துணைத் தலைவர் சந்திரபோஸ், சமூக ஆர்வலர் விஜயன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பிப் 06, 2024