இரண்டு வருடத்தில் காணமல் போன அறிவியல் பூங்கா
கோவை சிவானந்தா காலனியில் உள்ள மாநகராட்சி அறிவியல் பூங்கா சரியான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்துள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்பு சார்பில் ரூ. 51 லட்சம் செலவில் இந்த அறிவியல் பூங்கா சீரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. அறிவியல் மற்றும் ஆக்கப்பூர்வமான தகவல்களை உள்ளடக்கிய இந்த பூங்கா தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மே 25, 2025