/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தினமலர் செய்தி எதிரொலி | விரிசல் ஏற்பட்ட சுற்றுசுவர் இடிப்பு... விரைவில் கட்டித்தர கோரிக்கை
தினமலர் செய்தி எதிரொலி | விரிசல் ஏற்பட்ட சுற்றுசுவர் இடிப்பு... விரைவில் கட்டித்தர கோரிக்கை
கோவை சரவணம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுசுவரில் விரிசல் ஏற்பட்டு விழும் அபாய நிலையில் இருந்தது. இது குறித்து தினமலர் நிருபர் குழு கள ஆய்வு மேற்கொண்டது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் ஆய்வு செய்து விரிசல் ஏற்பட்ட சுற்றுசுவரை இடித்து அப்புறப்படுத்தினர். பள்ளி திறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றது. இந்த நிலையில் பள்ளியை சுற்றிலும் தற்போது பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால், விரைவில் சுற்றுச் சுவர் கட்டித் தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 01, 2024