/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சாப்பிடறதும் படிக்கிறதும் ஒரே இடம் | இடவசதி கேட்கும் நகராட்சி பள்ளி
சாப்பிடறதும் படிக்கிறதும் ஒரே இடம் | இடவசதி கேட்கும் நகராட்சி பள்ளி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். விருது பெற்ற அந்த பள்ளியில் போதுமான இடவசதி இல்லாததால், அதை தரம் உயர்த்தும் முயற்சியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு வேறு பள்ளிக்குத் தான் செல்ல வேண்டியுள்ளது. பள்ளியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இட பற்றாக்குறை பிரச்சினையை தீர்த்து வைக்கக் கோரி உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இடப்பற்றாக்குறையால் திண்டாடும் தொடக்கப்பள்ளிக் குறித்து இந்த காணொளி தொகுப்பு விளக்குகிறது.
மார் 04, 2024