உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணின் கணவரை தாக்கிய எஸ்.டி.பி.ஐ. பிரமுகர் | SDPI official arrested for threatening women | Kovai

பெண்ணின் கணவரை தாக்கிய எஸ்.டி.பி.ஐ. பிரமுகர் | SDPI official arrested for threatening women | Kovai

கோவை துடியலூர் சேரன் காலனியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சத்தியமூர்த்தியின் நண்பர் எஸ்.டி.பி.ஐ. பிரமுகர் ஹசன் பாதுஷா. இவர் துடியலுாரில் பாத்திரக்கடை வைத்துள்ளார். சத்தியமூர்த்தி குடும்பத்தினருடன் ஹசன் நெருங்கி பழகி வந்தார். சத்தியமூர்த்தி மனைவியிடமும் சகஜமாக பேசுவது வழக்கம். ஆர்த்தியின் மொபைலில் ஹசன் அடிக்கடி பேசி 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றினார். மேலும் கணவருடன் விவகாரத்து செய்து தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி ஆர்த்தியை ஹசன் அடிக்கடி மிரட்டி வந்தார். இதுகுறித்து சத்தியமூர்த்திக்கு தெரிய வந்தது. கணவர், மனைவி இருவரும் எஸ்.டி.பி.ஐ. உக்கடம் கிளை நிர்வாகிகளிடம் புகார் கூறினர். கட்சி ஆபீசில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது பணத்தை திருப்பி தருவதாக ஹசன் ஒப்புக் கொண்டார். அதே நேரம் ஆர்த்தி செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி ஹசன் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் மனமுடைந்த ஆர்த்தி கணவருடன் சொந்த ஊரான ஈரோடில் சில மாதங்களுக்கு முன் குடியேறினர். வேலை விஷயமாக சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்தி துடியலுார் வந்தார். அவரை சந்தித்த ஹசன் தகராறில் ஈடுபட்டார். ஆர்த்தியை விவகாரத்து செய்யும்படி மிரட்டி தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஹசன் மீது துடியலுார் போலீசில் சத்தியமூர்த்தி புகார் கூறினார். விசாரணை நடத்திய போலீசார் ஹசனை கைது செய்து கோர்ட் உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ